கரடியனாறு - உறுகாமம் பகுதியில் இ.போ.ச. பேருந்து மீது கல்வீச்சு - பயணிகள் அச்சம்
on
Monday, April 27, 2026
By
News
No comments
(செங்கலடி நிருபர் சுபஜன்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு - உறுகாமம் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்து ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது பேருந்தின் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட போது பேருந்தினுள் பயணிகள் இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பெரும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த திடீர் தாக்குதலால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டது.
இந்தக் கல்வீச்சுத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தாக்குதலை நடத்திய நபர்களை அடையாளம் காண்பதற்கான தீவிர விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சேதமடைந்த பேருந்தைப் பார்வையிட்டதுடன் சாட்சியமளிக்கக்கூடிய நபர்களிடமிருந்து வாக்குமூலங்களையும் பெற்று வருகின்றனர்.
'பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோடுஇ மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றது' என பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Whatsapp
You may like these posts