இந்திய செய்திகள்
விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
subeditor-1
46 நிமிடங்களுக்கு முன்
27 Apr 2026 • 7:25 PM
1 நிமிட வாசிப்பு
1,567 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதாகவும் அது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
இதனிடையே, விஜய்யின் வேட்புமனுவில் அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதை ஆய்வு செய்யக் கோரி பெரம்பூர் வாக்காளர் வெங்கடேஷ் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!