செய்திகள்
மட்டக்களப்பு – பழுகாமத்தில் மாபெரும் இரத்ததான முகாம்
News Editor
13 நிமிடங்களுக்கு முன்
28 Apr 2026 • 2:14 PM
1 நிமிட வாசிப்பு
128 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவி வரும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் முகமாக பழுகாமத்தில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் குருதித் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்து, அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் மனிதாபிமான நோக்கத்துடன் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
‘ஒரு தானம் பல உயிர்கள்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முகாமிற்கு, அபிவிருத்திக்கான பழுகாமம் பழைய மாணவர் சங்கம் (POSAD) முழுமையான அனுசரணையை வழங்கியது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் ஆர். ரஞ்சிதா தலைமையிலான குழுவினரும், பழுகாமம் பிரதேச வைத்தியசாலை பணியாளர்களும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
மட்டக்களப்பு – பழுகாமத்தில் மாபெரும் இரத்ததான முகாம்