காயத்தால் விலகிய சான்ட்னர் – மாற்று வீரர் அறிவிப்பு!
manel
April 28, 2026
Cricket
ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில், நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹராஜ் சேர்க்கப்பட்டார்.
வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அணியின் கடைசி போட்டியின் போது ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக சான்ட்னர் அணியிலிருந்து விலகினார்.
“இடது தோள்பட்டை காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2026 தொடரில் இருந்து விலகிய மிட்செல் சான்ட்னருக்கு பதிலாக, தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹராஜை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது,” என்று மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எல்லைக்கோட்டிற்கு அருகில் கேட்ச் பிடிக்க முயன்றபோது சான்ட்னருக்கு காயம் ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான மஹராஜ், சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார்.
அவர் 2024 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 75 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மும்பை அணியில் இணைகிறார்,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share Now
Facebook
Twitter
Linkedin
Pinterest
காயத்தால் விலகிய சான்ட்னர்