மட்டக்களப்பில் பெருத்தோட்ட பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்
on
Tuesday, April 28, 2026
By
NEWS
No comments
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி  அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை இன்று (28) திறத்து வைத்தார்.
பனை அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் கைப்பணிப் பயிற்சி பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொது கட்டடத்தில் கைப்பணிப் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கட்டட்டன.
இவ் நிலையத்தினால் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் எஸ்.ஜசிந்தன், மாவட்ட முகாமையாளர் ரீ. விஜயன், கைப்பணி ஆசிரியர் திருமதி ராஜேந்திரம் மலர்தேவி, கிராமசேவகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்தி சபையினால் கைப்பணி பயிற்சி நிறைவு செய்த செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் தொழில் உபகரணங்களும் இதன் போது அமைச்சரினால் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
Whatsapp
You may like these posts