செய்திகள்
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!
News Editor
10 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026  •  10:17 AM
1 நிமிட வாசிப்பு
126 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பேணுதல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலையும் மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், சுகாதார சேவையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக உள்ளடக்கி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.