செய்திகள்
மூதூர்-கடற்கரைச் சேனை பாடசாலை வீதி புனரமைப்பு
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026 • 2:21 PM
1 நிமிட வாசிப்பு
34 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் உள்ள பாடசாலை வீதியைப் புனரமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பி.எஸ்.ரி.ஜி (PSTG) திட்டத்தின் ஊடாக இதற்காக 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேச சபை தவிசாளர் எஸ். பிரகலாதன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வீதி புனரமைப்புப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த வீதியானது நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மூதூர்-கடற்கரைச் சேனை பாடசாலை வீதி புனரமைப்பு