உலக செய்திகள்
மனைவியை கொன்று மிருகக்காட்சிசாலை குப்பை எரியூட்டியில் எரித்த கணவன்!
News Editor
1 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026  •  2:58 PM
1 நிமிட வாசிப்பு
52 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் உள்ள, அசாஹியாமா மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைக் கொலை செய்து, அவரது உடலை அங்கிருந்த கழிவு எரியூட்டியில் (Incinerator) வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் 23 ஆம் திகதி குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று, மிருகக்காட்சி சாலையில் உள்ள எரியூட்டில் வீசி, பல மணி நேரம் எரித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், எரியூட்டி அமைந்துள்ள பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் உயிரிழந்த பெண்ணின் உடலோ அல்லது உடற்பாகங்களோ இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அசாஹியாமா மிருகக்காட்சிசாலையானது பராமரிப்புப் பணிகள், கோடைக்கால முன்னேற்பாடுகளுக்காக ஏப்ரல் 8 முதல் 28 வரை மூடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 29 ஆம் திகதி ‘கோல்டன் வீக்’ விடுமுறையை முன்னிட்டு பூங்காவை மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது அங்கு நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை, தேடுதல் பணிகளால், திட்டமிட்டபடி பூங்காவை திறப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. (Japan Times)