முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
on
Wednesday, April 29, 2026
By
Batticaloa
No comments
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் பொது நிதியை முறைகேடு செய்தமை ஆகிய முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை வரும் ஜூலை 8-ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டி-யினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் போது மற்றுமொரு முக்கிய தகவலை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான கலாநிதி மைத்ரி விக்கிரமசிங்கவையும் இந்த விவகாரம் தொடர்பாகச் சந்தேகநபராகப் பெயரிடுவதா என்பது குறித்து அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Whatsapp
You may like these posts