செய்திகள்
டிக்கோயா பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு!
News Editor
14 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026 • 4:52 PM
1 நிமிட வாசிப்பு
105 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 22 பேர் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றே, பிற்பகல் 3 மணியளவில் டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டிக்கோயா பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு!