இலங்கை செய்திகள்
நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்
subeditor-1
55 நிமிடங்களுக்கு முன்
29 Apr 2026  •  8:07 PM
1 நிமிட வாசிப்பு
3,224 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.