நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்
on
Thursday, April 30, 2026
By
Batticaloa
No comments
நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமான கூட்டங்கள் மற்றும் பேரணிகள் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மே தின நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சூழலை உருவாக்குதல், பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயற்படுத்துதல் ஆகியவற்றுடன், வழமையான வாகனப் போக்குவரத்துகளைச் சீராகப் பேணுவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் நடைபெறும் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்குப் பொலிஸ் மா அதிபர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
Whatsapp
You may like these posts
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்