செய்திகள்
கொழும்பு ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்கு பாசிக்குடா வளங்களை தாரைவார்க்க முடியாது – சாணக்கியன்
News Editor
1 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026 • 10:24 AM
1 நிமிட வாசிப்பு
21 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரை, அப்பகுதி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய இயற்கை வளமாகும். இவ்வளத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம், வாழைச்சேனை மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, கொழும்பில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது, என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில், தவிசாளர் சு.சுதாகரன் மற்றும் சபை செயலாளர் உள்ளிட்டோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இயங்கும் 17 சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் பல ஆண்டுகளாக பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வளத்தின் மூலம் சபைக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் இதுவரை பெறப்படவில்லை.
மேலும், கடந்த காலங்களில் சபையை நிர்வகித்தவர்கள் இதனை கண்காணிக்கத் தவறியிருந்தார்களா அல்லது இச்செயல்களில் தொடர்புடையவர்களாக இருந்தார்களா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாக உள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுற்றுலா பணியகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், பல மாதங்கள் கடந்தும் அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
பாசிக்குடா கடற்கரை, மட்டக்களப்பிற்கு கிடைத்த மிக முக்கியமான சுற்றுலா வளமாகும். இதன் மூலம் முதன்மையாக வாழைச்சேனை மக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைக்க வேண்டும் எனவும், வெளிநகர ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டும் லாபம் ஈட்டும் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாசிக்குடா பகுதியில் இயங்கும் சில ஹோட்டல்கள் தேவையான அனுமதியின்றி செயல்படுகின்றன, அவற்றிடமிருந்து நிலுவையில் உள்ள வரி தொகைகளை வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், இவ்வருமானத்தினை பயன்படுத்தி வாழைச்சேனை பிரதேசத்தின் முழுமையான அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,என தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவான் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கொழும்பு ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்கு பாசிக்குடா வளங்களை தாரைவார்க்க முடியாது – சாணக்கியன்