செய்திகள்
யாழில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு!
News Editor
31 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026 • 10:05 AM
1 நிமிட வாசிப்பு
567 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று புதன்கிழமை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு சூழலில், இந்த மாணவன் ஒன்லைன் விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகியிருந்த நிலையில், நேற்று அதிகாலை விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோது, வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த மாணவனின் இந்தத் துயர முடிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.