செய்திகள்
தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்
News Editor
19 நிமிடங்களுக்கு முன்
30 Apr 2026  •  2:57 PM
1 நிமிட வாசிப்பு
200 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
மாணவர்களிடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​பாடசாலை அதிபர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
​396 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 87 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதிலிருந்து அறுபது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
​இத்தேர்தலின் ஊடாகத் 60 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதில் 05 பேர் நிறைவேற்று உறுப்பினர்களாகவும், 10 பேர் அமைச்சர்களாகவும், ஏனையவர்கள் சபை உறுப்பினர்களாகச் செயற்படுவர்.
​”வருங்கால சந்ததியினருக்கு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து நேரடி அனுபவத்தை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.” என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
​இந்தத் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, மிகுந்த ஒழுக்கத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.