காலாவதியான குடிநீர் விற்பனை - வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்
on
Thursday, April 30, 2026
By
Batticaloa
No comments
காலாவதியான குடி நீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சத்து பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
தம்புள்ள பிரதேச ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கே, தம்புள்ள நீதவான் மேற்படி அபராதத்தை விதித்தார்.
மாத்தளை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இம்முற்றுகையை மேற்கொண்டிருந்தனர். 70 ரூபாவிற்கு விற்க வேண்டிய தண்ணீர் போத்தலை 100 ரூபாவிற்கு விற்பளை செய்துள்ளதுடன் அது காலாவதியானது என்றும் தெரிய வந்துள்ளது.
Whatsapp
You may like these posts