பிரதான செய்தி
விரிவுரையாளர் கொலைச் சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
May 1, 2026
Facebook
Twitter
Pinterest
WhatsApp
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி பிரதீபனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் சட்டத்தரணி வீ.கௌதமனும் ஆஜராகினர்.
குறித்த வழக்கின் மரண விசாரணையை எதிர்வரும் மே 20ம் திகதி நடத்த தீர்மானித்துள்ள நீதிவான் எஸ்.லெனின்குமார், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
Previous article
அர்ச்சனா எம்பிக்கு பிணை!
Next article
தையிட்டி விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!
Related Articles
பிரதான செய்தி
தையிட்டி விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!
பிரதான செய்தி
அர்ச்சனா எம்பிக்கு பிணை!
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
- Advertisement -
Latest Articles
பிரதான செய்தி
தையிட்டி விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!
பிரதான செய்தி
அர்ச்சனா எம்பிக்கு பிணை!
உள்ளூர் செய்திகள்
அர்ச்சுனாவிடம் இருந்து துப்பாக்கியை மீளப்பெற வேண்டும்!
முக்கிய செய்தி
அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!
பிரதான செய்தி
அர்ச்சுனா எம்பி துப்பாக்கி காட்டி தர்க்கம்
Load more