எரிபொருள் விலையில் மாற்றமில்லை - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
on
Friday, May 01, 2026
By
Batticaloa
No comments
இன்று வெள்ளிக்கிழமை (01) எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தம் குறித்து இன்று தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இறுதியாக கடந்த மார்ச் 21ஆம் திகதி எரிபொருள் விலைகள் அதிரடியாக அதிகரிக்கப்பட்டன. அன்று முதல் அமுலிலுள்ள தற்போதைய விலைப் பட்டியல் வருமாறு,
92 ஒக்டேன் பெற்றோல்: 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றர் 398 ரூபா விற்பனை செய்யப்படுகிறது.
95 ஒக்டேன் பெற்றோல்: 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றர் 455 ரூபா விற்பனை செய்யப்படுகிறது.
அட்டோ டீசல்: 79 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றர் 382 ரூபா விற்பனை செய்யப்படுகிறது.
சூப்பர் டீசல்: 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றர் 443 ரூபா விற்பனை செய்யப்படுகிறது.
மண்ணெண்ணெய்: 60 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றர் 255 ரூபா விற்பனை செய்யப்படுகிறது.
Whatsapp
You may like these posts
எரிபொருள் விலையில் மாற்றமில்லை - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு