செய்திகள்
அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வௌியீடு!
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
01 May 2026  •  12:51 PM
1 நிமிட வாசிப்பு
20 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைய அமைக்கப்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் தீர்மானத்தின் மூலம் சுமார் 9,800 ஊழியர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற அனுமதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவிக்கப்பட்டவாறு, தற்போது அரச நிறுவனங்களில் தற்காலிக, பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் இதன் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.
ஏற்கனவே நிவாரண அடிப்படையில் பணியாற்றி, சுற்றுநிருப விதிகளுக்கமைய நிரந்தர நியமனம் பெற்றிருந்தும், அந்த நியமனங்கள் இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஊழியர்களை முறைப்படுத்துவது தொடர்பான நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.