செய்திகள்
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
News Editor
49 நிமிடங்களுக்கு முன்
01 May 2026 • 12:03 PM
1 நிமிட வாசிப்பு
3,289 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி, பார்வையாளர்களுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நோயாளியை ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
தொற்று நோய்களின் பரவலைத் தடுக்க, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 12 வயதிற்கு குறைவான சிறுவர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை வளாகத்தில் அமைதியை பேணுதல் அவசியமாக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் ஓய்வை பாதிக்கும் எந்தவொரு செயல்களிலும் ஈடுபட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் வழங்கும் வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இந்த நடவடிக்கைகள் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!