உலக செய்திகள்
ஊரே சேர்ந்து பதற்றத்துடன் தேடுவதை அறியாது மலைப்பகுதியில் அசந்து தூங்கிய சிறுவன்!
News Editor
16 நிமிடங்களுக்கு முன்
01 May 2026 • 2:16 PM
1 நிமிட வாசிப்பு
135 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
துருக்கியில் 10 மணிநேரம் காணாமல் போன சிறுவன் ஒருவன், தனது வீட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை ஒன்றில் எவ்விதக் கவலையுமின்றித் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
துருக்கியின் உஸ்மானியே (Osmaniye) மாகாணத்தை சேர்ந்த சம்லிடெப் (Çamlıtepe) கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் முகமது சுலைமான் மாரே, விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார்.
சிறுவனை காணாததால் அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் பெரும் அதிர்ச்சிக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், AFAD மீட்பு படையினர் மற்றும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒன்றிணைந்தனர். இரவு முழுவதும் டிரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்த தீவிர தேடுதலின் முடிவில், வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சிறுவன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
மீட்புப் படையினர் அங்கு சென்றபோது, தன்னை ஒரு ஊரே பதற்றத்துடன் தேடிக்கொண்டிருப்பதை அறியாத அச்சிறுவன், எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலையின் மேல் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுவன், மருத்துவபரிசோதனைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் இந்த நிம்மதியான உறக்கம் குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.