நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் - திலும் அமுனுகம
on
Friday, May 01, 2026
By
Batticaloa
No comments
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சர்வஜன அதிகார கட்சியின் மே தினப் பேரணியில் வெள்ளிக்கிழமை (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடர் என்பது அனைவருக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்ட அதே தேசியவாதக் கொள்கைகள் இன்று திலித் ஜயவீரவிடம் மட்டுமே இருக்கின்றது. இந்த தேசியவாதத்தை மதிக்கின்ற ஒரு தலைவரை வெற்றிபெறச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போது எந்தவொரு அரசியல் கட்சியிலும் இத்தகைய தேசியவாதத் தலைமை இல்லை. அந்த தலைமைத்துவத்தை சர்வஜன அதிகார கட்சி மாத்திரமே கொண்டிருக்கிறது. மேலும் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றும் கட்சி சர்வஜன அதிகார அமைப்பாகும். அதன் மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீர பதவியேற்பார் என்பதை இந்த மே தினத்தில் உறுதியாக கூறுகின்றேன். அத்துடன் வெற்றிப் பெற முடியாது என்றால் தான் இத்தகைய பணிகளில் கைகோர்க்க போவதில்லை என்றார்.
Whatsapp
You may like these posts