இன்றைய வானிலை
on
Saturday, May 02, 2026
By
Batticaloa
No comments
மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
Whatsapp
You may like these posts