செய்திகள்
கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
02 May 2026 • 11:28 AM
1 நிமிட வாசிப்பு
15 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
-யாழ்.நிருபர்-
யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!