சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட இளைஞன் கைது
on
Saturday, May 02, 2026
By
Batticaloa
No comments
காலி, உணவட்டுன பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த ஸ்மார்ட் ரக கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பணியகம் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது, கிராண்ட்பாஸ் 'கெமுனு' வீதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் சில நாட்களுக்கு முன்னர் உணவட்டுன பகுதியில் கட்டுமானப் பணி ஒன்றிற்காகச் சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த 4 நாட்களில், மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சொந்தமான 4 கையடக்கத் தொலைபேசிகளை அவர் திருடியுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கு நிரந்தர வதிவிடம் கிடையாது என்பதுடன், அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித் திரியும் ஒருவர் தெரியவந்துள்ளது.
இவர் இதற்கு முன்னர் ஹோமாகம மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் தங்கியிருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா அல்லது வேறு பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வரும் குற்றவாளியா என்பது குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Whatsapp
You may like these posts
சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட இளைஞன் கைது