செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த யுவதி!
News Editor
0 நிமிடங்களுக்கு முன்
03 May 2026 • 8:09 AM
1 நிமிட வாசிப்பு
22 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
யாழ்ப்பாணத்தில், நேற்று சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று கிணற்றினருகே வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த யுவதி!