IOC எரிபொருள் விலையும் அதிகரிப்பு
on
Sunday, May 03, 2026
By
Batticaloa
No comments
எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 392 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 410 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் இருக்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Whatsapp
You may like these posts