செய்திகள்
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!
News Editor
53 நிமிடங்களுக்கு முன்
03 May 2026 • 8:31 AM
1 நிமிட வாசிப்பு
3,467 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை முற்றுகையிட்டுள்ளனர்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் அதிகாரி லக்மல் விஜயவர்த்தன தலைமையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பீப்பாய்களில் இருந்த சுமார் 540,000 மில்லி லீற்றர் கோடா (Godu) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, பரவிபாஞ்சான் குளத்தின் நீரில் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 மரக் குற்றிகள் மற்றும் மரக்கம்புகளும் கைப்பற்றப்பட்டன.
சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!