களுவாஞ்சிக்குடி உணவகங்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த தரமற்ற யோக்கட் மற்றும் குளிர்பானங்கள் கைப்பற்றல்
on
Sunday, May 03, 2026
By
Batticaloa
No comments
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பழுதடைந்த நிலையிலும் உரிய வெப்பநிலை பேணப்படாமலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த யோக்கட் மற்றும் குளிர்பான போத்தல்களைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளை மீறிய வகையில், உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட யோக்கட் மற்றும் குளிர்பானங்கள் குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், இப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.கஜனன் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, உரிய தரக்கட்டுப்பாடுகள் இன்றி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சுகாதார முறைகேடான வகையில் இந்தப் பொருட்களை விற்பனைக்காகக் கொண்டுவந்த நபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Batticaloa
Whatsapp
You may like these posts
Batticaloa