அதிகரிக்கும் டீசல் விலை - பாடசாலை வாகனக் கட்டணங்களும் அதிகரிக்கிறது
on
Sunday, May 03, 2026
By
Batticaloa
No comments
மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய, டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோருடன் கலந்துரையாடி ஓரளவுக்கு உயர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். என அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.
கட்டண உயர்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய, நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதனால் கட்டணத்தை அதிகரிக்கவில்லை.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. பெற்றோருக்கு சுமையாக அமையாத வகையில் டீசல் விலை அதிகரிப்புக்கு அமைய கட்டணத்தை உயர்த்த எதிர்பார்த்துள்ளோம்.
மிகவும் சிரமத்துடனேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். பலமுறை டீசல் விலை அதிகரித்தமையால், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் ஏதாவதொரு வழியில் எமக்கு மானியம் வழங்கினால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றார்.
Whatsapp
You may like these posts
அதிகரிக்கும் டீசல் விலை - பாடசாலை வாகனக் கட்டணங்களும் அதிகரிக்கிறது