வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்தின் கலாசாரக்கதம்பம்
on
Monday, May 04, 2026
By
chithdassan
No comments
(சித்தா)
வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்தின் கலாசாரக்கதம்பம் சக்தி விளையாட்டுக் கழகத் தலைவர் க.அருட்செல்வன் தலைமையில் வெல்லாவெளி சக்தி விளையாட்டு மைதானத்தில் 03.05.2026 ஆம் திகதி மிகவும் கோலாகரமானதாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சா.வரதராஜன், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாந்த டி சில்வா, வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் அ.ஜெயப்பிரதாபன் ஆகியோருடன் கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள்,பொதுமக்கள், போட்டியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளைத் தொடர்ந்து கலாசார விளையாட்டுகள் இடம்பெற்றன. சக்தி விளையாட்டு மைதானம் நீண்ட காலத்தின் பின் ஒரு விழாக்கோலம் கண்டு மக்கள் பூரித்துப்போயிருந்தனர்
Vellavely sakthi Sports Club
Whatsapp
You may like these posts
Vellavely sakthi Sports Club
வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்தின் கலாசாரக்கதம்பம்