கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை..
on
Monday, May 04, 2026
By
yana
No comments
நாட்டின் சில பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அத்துடன் இடைக்கிடையே பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் சாத்தியம் நிலவுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் நிற்காமல், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் அல்லது மூடிய இடங்களுக்குள் இருக்கவும்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.
இடி மின்னல் நிலவும் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் ஏனைய மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
Whatsapp
You may like these posts
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை..