கொக்கட்டிச்சோலை படையாண்டவெளி மீன்பிடித்துறை அருகாமையில் பாரிய கசிப்பு உற்பத்தி முற்றுகை
on
Monday, May 04, 2026
By
Batticaloa
No comments
கொக்கட்டிச்சோலை, படையாண்டவெளி மீன்பிடித் துறை அருகில் பாரிய அளவில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வேணுஜன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து 6 வரள்களில் பெருமளவு கோடா, 1 அடுப்பு, செப்பு குழாய், மேலும் கசிப்பு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஈஸ்ட் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொக்கட்டிச்சோலை படையாண்டவெளி மீன்பிடித்துறை அருகாமையில் பாரிய கசிப்பு உற்பத்தி முற்றுகை !
Posted by
Battinews
on
Monday, May 4, 2026
Batticaloa
Whatsapp
You may like these posts
Batticaloa