உலக செய்திகள்
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்?
News Editor
10 நிமிடங்களுக்கு முன்
04 May 2026 • 4:57 PM
1 நிமிட வாசிப்பு
138 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஜாஸ்க் தீவுப் பகுதியில், ஈரானிய புரட்சிகர காவலர் படையின் எச்சரிக்கையைப் புறக்கணித்துச் சென்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை வழிநடத்துவதற்காக “சுதந்திரத் திட்டம்” (Project Freedom) என்ற திட்டத்தை திங்கட்கிழமை தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த முயற்சிக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, 15,000 இராணுவ வீரர்கள், 100க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்?