ஏறாவூர்ப்பற்று பிரதேச மகளீர் எல்லே போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் அணி சாம்பியன்!
on
Monday, May 04, 2026
By
yana
No comments
50 வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூ.ர்ப் பற்று பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி ஞாயிற்றுக்கிழமை (03) செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
ஏழு விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றிய மகளீர் எல்லே சுற்றில் இறுதிப்போட்டி செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் தளவாய் கடல்புறா விளையாட்டு கழகங்களிடையே நடைபெற்றது..
நாணையச் சுழற்சியில் வெற்றி பெற்ற செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து அணிக்கு வழங்கப்பட்ட 25 பந்துகளில் 08 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தளவாய் கடல்புறா விளையாட்டு கழக அணி வழங்கப்பட்ட 25 பந்துகளில் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.
செங்கலடி கோல்ட் ஸ்டார் அணி 08 ஓட்டங்களினால் வெற்றிபெற்று 2026ம் ஆண்டின் சம்பியபனது.
Whatsapp
You may like these posts