இந்திய செய்திகள்
வரலாறு திரும்பியது! எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!
subeditor-1
1 நிமிடங்களுக்கு முன்
04 May 2026  •  9:07 PM
1 நிமிட வாசிப்பு
28 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்துள்ளார்.
1977 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட எம்ஜிஆரின் அதிமுக 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக ஒரு கோடி 62 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதன்மூலமாக எம்ஜிஆரின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தவெக மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி பெற்றுள்ளார்.